ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 7 மே 2023 (12:45 IST)

இதை மட்டும் செய்தால் காங்கிரஸ், பாஜக 2 கட்சுகளும் தோல்வி அடையும்: மாயாவதி

தேர்தலில் வாக்குச்சீட்டு பயன்படுத்தினால் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தோல்வி அடையும் என உத்தரப்பிரதேசம் முன்னாள் முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாதிவாதி கட்சி 114 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பெங்களூரில் மாயாவதி பிரச்சாரம் செய்தார். 
 
அப்போது அவர் ’மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியை இழந்தது என்றும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே மீண்டும் வாக்கு சீட்டுகளை பயன்படுத்தி தேர்தல் நடத்தினால் தோல்வி அடையும் என்று தெரிவித்தார். 
 
தேர்தலில் தேர்தலில் மத சாயத்தை பூசுவது ஏற்க முடியாது என்றும் ஜாதியின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி தவறாக வழிநடத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் நலிந்த பிரிவினர் முன்னேற வேண்டும் ஆனால் மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva