1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today fourth day share market high

4வது நாளாக உயர்ந்த பங்குச்சந்தை: மீண்டும் உச்சம் பெறுமா?

share
இந்த வாரம் திங்கட்கிழமை முதல் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பங்குசந்தை உயர்ந்து வந்த நிலையில் இன்று 4வது நாளாகவும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது
 
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்தார் என்பதையும் பார்த்தோம்
 
இந்நிலையில் தற்போது மீண்டும் படிப்படியாக பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியவுடன் 350 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்து 54140 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் 108 புள்ளிகள் உயர்ந்து 16094 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதே நிலையில் தொடர்ச்சியாக பங்குச்சந்தை உயர்ந்தால் மீண்டும் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தண்டவாளத்தில் இரும்பு கம்பி; ரயிலை கவிழ்க்க சதி?? – மதுரை அருகே பரபரப்பு!