செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (09:29 IST)

ஆபத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் பழக்கம்! சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!

ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம்
மதுரையில் இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியோடு பழகி இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதூர் பகுதியை சேர்ந்தவர் பயாஸ்கான். இவர் மதுரையை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக தொடங்கியுள்ளார். நாளடைவில் சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறிய பயாஸ்கான் அடிக்கடி சிறுமியை வெளியே சில இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பயாஸ்கான் கேட்டதன்பேரில் தனது வீட்டில் இருந்த 10 பவுன் நகையை சிறுமி எடுத்து கொடுத்துள்ளார். அதை பயாஸ்கான், அவரது நண்பர்கள் இருவர் மற்றும் நண்பரின் தாய் ஆகியோர் சேர்ந்து அடகு கடை ஒன்றில் வைத்து 2.70 லட்சம் பணம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் நகையை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான விசாரணையில் போலீஸார் சிறுமியை விசாரித்தபோது மேற்கண்ட சம்பவங்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் பயாஸ்கான் உள்ளிட்ட 4 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்ததுடன், அடகு கடையில் வைத்த நகையையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.