1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

தொடர்ந்து 3 ஆயிரத்திற்கு மேல் தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் வெகுவாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,79,188 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,23,843 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,36,253 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 19,092 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
ரெனால்ட் ஆலை மூடப்படுவது ஓபிஎஸ் கற்பனை! – அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!