1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Andman island meet earthquake

அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

earthquake
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய யூனியன் பிரதேசமும், சுற்றுலா தீவுமான அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்தமானின் போர்ட் பிளேர் பகுதியின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?