டிக்கெட் எடுக்காமல் ரயில் பயணம்..! கோடிகளில் குவிந்த அபராதம்!
கொரோனா காரணமாக குறைவான ரயில் சேவைகளே உள்ள நிலையில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களிடம் வசூலிக்கப்படும் அபராதம் அதிகரித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல வழித்தடங்களில் ரயில்சேவை நடந்து வரும் நிலையில் ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர், சரியான டிக்கெட் வைத்தில்லாதோருக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வடகிழக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் ஒரு ஆண்டில் மட்டும் ரூ.23.36 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு மார்ச் வரை கிடைத்த அபாரத தொகை ஆகும்.
மொத்தமாக 4,48,392 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டை விட 840 சதவீதம் அதிக அபராதம் வசூலாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.