1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Today corona cases in India

1 லட்சமாக குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை! – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் முன்னதாக அதிகரித்திருந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 40 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,45,87,822 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 190 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,68,980 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,40,18,299 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,00,543 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்வா?