தொடர்புடைய செய்திகள்
- திறக்கப்படுகிறதா திருப்பதி கோவில்?? – யார் யாருக்கு அனுமதி?
- திருப்பதி பிரசாத லட்டு... ஆன்லைனில் புக் செய்து பெற்றுக் கொள்ளலாம் ! பாதி விலை குறைப்பு
- தேவஸ்தன சொத்துக்கள் விற்பனையா? ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு!
- திருப்பதி லட்டு பிரசாதம் பாதியாய் விலை குறைப்பு !
- கொரோனா ஊரடங்கு… திருப்பதி லட்டு விற்பனை தொடக்கம்- விலையில் அதிரடி மாற்றம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சோதனை ஓட்டம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று தேவஸ்தான் ஊழியர்கள் 50 பேருடன் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் பல்வேறு தொழில்களுக்கும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 8ம் தேதி முதல் கோவில்களை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து இன்று தேவஸ்தான் ஊழியர்கள் 50 பேரைக் கொண்டு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதில் சமூக இடைவெளி மற்றும் சானிட்டைசர் மற்றும் முகக்கவசம் அணிதல் ஆகிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கோள்ளப்பட்டன. இதனை தேவஸ்தான தலைவர் சுப்பா ரெட்டி மேற்பார்வையிட்டார்.
