வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 21 மே 2020 (22:35 IST)

திருப்பதி லட்டு பிரசாதம் பாதியாய் விலை குறைப்பு !

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஊரடங்கு முடியும் வரை திருப்பதியில் கோயிலில் உள்ள பிரசாத லட்டின் விலையை ரூ.50லிருந்து ரூ. 25 க்கு பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.

இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி கூறியுள்ளதாவது :

கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா ஊரங்கால் ஏழுமலையான் கோவிலில் மக்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மக்களுக்கு தரிசமம் கிடைக்காத நிலையில்  பிரசாதத்தை மக்களுக்கு அளிக்க வேண்டுமென பக்தர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

அதனால், ஒரு லட்டு பிரசாதத்தின் விலையை ரூ. 50 லிருந்து ரூ.25 ஆக பாதியாக குறைந்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.விருப்பமுள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் லட்டு பிரசாதத்தை வாங்கிச் சென்ரு பக்தர்களுகு அளிக்கலாம் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் லட்டு பிரசாத விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.