1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 மே 2020 (10:32 IST)

தேவஸ்தன சொத்துக்கள் விற்பனையா? ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை விற்க தடை விதித்து ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பணம், நகை மட்டும் அல்லாது நிலங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இப்படி பல நிலங்கள் தேவஸ்தனம் பெயரில் உள்ளது. 
 
எனவே இந்த நிலங்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்திருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்புகள் வெளியானது. பிரச்சனையும் பெரிதானதால் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் இந்த விவகாரம் குறித்து விவரித்ததாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது தேவஸ்தன சொத்துகளை ஏலம் விடும் முடிவை தேவஸ்தான நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் இறுதி முடிவு வரும் வரை சொத்துகளை பொது ஏலத்தில் விற்பனை செய்யும் முடிவை தேவஸ்தன நிர்வாகம் ஒத்திவைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.