தொடர்புடைய செய்திகள்
- திருப்பதியில் சில புனித தீர்த்தங்களும் அதன் பலன்களும் !!
- திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம்! – 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!
- செப்டம்பர் மாதத்திற்கு அங்கப்பிரதட்சண டோக்கன்! – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
- திருப்பதியில் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்: இன்று முதல் விற்பனை!
- திருப்பதியில் பிரம்மோற்சவ விழா! – நாளை ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு!
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா: செப்டம்பர் 27 முதல் தொடக்கம் என அறிவிப்பு!
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்க படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது
ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த மெகா திருவிழா தொடக்கத்தை அடுத்த கொடியேற்று விழா நடைபெற உள்ளதாகவும் கோவிலில் உள்ள தங்க கொடிமரத்தில் மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் கருடன் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரம்மோற்சவ விழாவின் கடைசி நாளில் சந்தனப்பொடி அபிஷேகம் செய்து நீராடல் செய்யப்படும் என்றும் பிரமோற்சவ விழா காரணமாக ஒன்பது நாட்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
