திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (16:19 IST)

அரசு கல்வி தொலைக்காட்சி சிஇஓ நியமனம் திடீர் ரத்து?

education tv
அரசு கல்வி தொலைக்காட்சியில் புதிய சிஇஓ நியமனம் செய்யப்பட்ட நிலையில் அந்த நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அரசு கல்வி தொலைக்காட்சி சிஇஓவாக மணிகண்ட பூபதி என்பவர் பணி நியமனம் செய்யப்பட்டார். இவரது நியமனத்தை முழுமையாக ரத்து செய்துவிட்டதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது 
 
மணிகண்ட பூபதி ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்றும் இவரது தலைமையின் கீழ் கல்வி தொலைக்காட்சி இயங்கினால் ஆர்.எஸ்.எஸ் சம்பந்தமான பாடங்கள் புகுத்தப்படும் என்றும் பலரும் விமர்சனம் செய்தனர் 
 
இந்த நிலையில் தற்போது மணிகண்ட பூபதி பணி நியமனம் முழுமையாக ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதி வாய்ந்த ஒருவர் தொலைக்காட்சிக்கு சி.இ.ஓவாக நியமனம் செய்யப்படுவர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது