திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (09:50 IST)

திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம்! – 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசனத்திற்கான அக்டோபர் மாத டிக்கெட்டுகள் 72 மணி நேரத்தில் விற்று தீர்ந்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் நிலையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதனால் அக்டோபர் மாதத்திற்கான சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகள் அக்டோபர் 5ம் தேதிக்கு பிறகு உள்ள 24 நாட்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 24 நாட்களுக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்ட 72 மணி நேரத்தில் மொத்தமாக 6 லட்சம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன. இதன்மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.