வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (11:02 IST)

கன்னி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை விரைவில் திறப்பு

மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 16 - 21 வரை சபரிமலை கோயில் நடை திறப்பு என அறிவிப்பு.
 
கேரளாவில் கொரோனா பாதிப்பு, நிபா வைரஸ் ஆகியவை அதிகரித்து வரும் நிலையிலும் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளது. 
 
இணையதளத்தில் முன்பதிவு செய்த பக்தர்கள் 15,000 பேர் தினமும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கப்படுவர். செப்டம்பர் 21 வரை பக்தர்கள் தரிசனத்திற்காக சபரிமலை கோயிலில் நடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.