1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Thirumavalavan criticizes on Fadnavis rule

”ஃபட்நாவிஸ் ஆட்சியா? ஜனநாயகம் எங்கே?” திருமா ஆவேசம்

திருமாவளவன்
மஹாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், “இது ஜனநாயக நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது” என விமர்சித்துள்ளார்.

மஹாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக இன்று காலை பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முன்னதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத கூட்டணி ஆகிய கட்சிகள் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பது குறித்தான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைப்பதற்கு ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று பாஜகவின் ஃபட்நாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அஜித்பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றுள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன் “மஹாராஷ்டிரா அரசியல் இந்திய அரசியலில், மதச்சார்பின்மையை காப்பாற்றுவது கடினம் என்பதை காட்டியுள்ளது. மேலும் இது ஜனநாயக நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது என விமர்சித்துள்ளார்.

திடீரென பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்பவார், “பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைப்பது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல, இது அஜித் பவாரின் சொந்த முடிவு” என கூறியுள்ள நிலையில் தற்போது திருமாவளவன் :ஜனநாயக நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது” என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
இலங்கை ஆதிக்குடிகள்: 200 ஆண்டுகள் பழமையான வேடர்களின் மண்டை ஓடுகள் ஒப்படைப்பு