அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே….”முதல்வராக பதவியேற்றார் ஃபட்நாவிஸ்..”
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது குறித்தான இழுபறி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் இன்று காலை முதல்வராக பதவியெற்றுள்ளார்
மஹாராஷ்டிரா மாநில தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு இரு கட்சிகளுக்கும் இடையே ஆட்சி அமைப்பதற்கான இழுபறி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே பல பேச்சுவார்த்தைகள் நடந்த நிலையில் இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதனை தொடர்ந்து தேசியவாத கட்சியின் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பதில் ஒருமித்த கருத்து எற்பட்டுள்ளது என கூறினார். இந்நிலையில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக பாஜகவை சேர்ந்த ஃபட்நாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்றுள்ளார். மேலும் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் திடீரென கூட்டணி சேர்ந்து ஆட்சியமைத்துள்ளது அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.