1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (23:09 IST)

நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர  நீட் தேர்வு கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு எழுத   வயது  உச்சவரம்பு இல்லை என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில்  மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மணீஸ் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது 25 ஆக இருந்த நிலையில், இது    தற்போது நீக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத வயது உட்ச வரம்பு இல்லை என்பதால், அதிகம் பேர் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு உருவாகும் அதிக மருத்துவர்களும் உருவாகுவர் எனத் தெரிவித்துள்ளார்.