வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 4 ஜனவரி 2020 (20:38 IST)

தேவாலயத்தின் கதவை உடைத்து லட்ச ரூபாய் கொள்ளை..

கேரளாவில் தேவாலயத்தின் கதவை உடைத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தின் இடிக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள அடிமாலி பகுதியில் உள்ள புனித தாமஸ் தேவாலயத்தில், ஆலய அதிகாரிகள் நேற்று இரவு வழக்கம் போல் கதவை பூட்டிவிட்டு சென்றனர். காலையில் தேவாலயத்தை வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆலய அதிகாரிகள், தேவாலயத்தின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அதில் இருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து உண்டியலில் உள்ள காசும் திருடுபோயுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.