செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:45 IST)

ஆசைக்கு இணங்க சொல்லி அக்காள் புருஷன் டார்ச்சர்! ஆற்றில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொண்ட சகோதரிகள்!

உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவர் கைகளை கட்டிக் கொண்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தர பிரதேசத்தில் உள்ள மான்காபூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார். இவருக்கு அனிதா, சுனிதா, புனிதா என மூன்று மகள்கள் உள்ளனர். முதல் முகள் அனிதாவுக்கு திருமணமாகிவிட்டது. சுனிதா 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், புனிதா 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று சுனிதாவும், புனிதாவும் வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அசோக் குமார் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அழைத்துக் கொண்டு தனது மகள்களை தேடத் தொடங்கியுள்ளார்.

 

அப்போது அவர்கள் இருவரும் கைகள் கட்டப்பட்ட நிலையில் பிசுஷி ஆற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்,. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்து இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், தனது முதல் மகளின் கணவன் தொடர்ந்து தனது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அதனால்தான் தனது மகள்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும் அசோக் குமார் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K