1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (23:02 IST)

கோவிலில் திருடும் முன் பயபக்தியுடன் பூஜை செய்த திருடன்

கோயிலில் திருடுவதற்கு முன் அந்த சிலைக்கு பூஜை செய்த திருடன் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது
 
ஐதராபாத் நகரில் உள்ள துர்கா பவானி கோயிலில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென அந்த கோவிலின் பிரகாரத்தில் இருந்த சாமி சிலை திருடு போனது. ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்த பகுதியில் திருட்டு எப்படி நடந்தது என்பதை கண்டுபிடிக்க கோவிலில் உள்ள சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்தனர்.
 
அதில் சாமி சிலையை திருட வந்த திருடன் சாமி சிலைக்கு முன் பூஜை செய்து, தோப்புக்கரனம் போட்டு பயபக்தியுடன் வழிபாடு செய்கிறான். அதன்பின்னர்  தன்னை யாரும் கவனிக்கவில்லை என்று உறுதி செய்துகொண்டு விக்ரகத்தின் தலையிலிருந்த கவசம், வெள்ளி கிரீடம் ஆகியவற்றை திருடிவிட்டு பின் மீண்டும் ஒருமுறை சாமியை கும்பிட்டு விட்டு சென்று விடுகிறான்
 
இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவியில் உள்ள திருடனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.