புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (13:23 IST)

ஸ்டாலினே ரூல்ஸ் போடுவாராம்; அவரே எதிர்ப்பாராம்! – விளாசிய எடப்பாடியார்!

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தலை கொண்டு வந்த ஸ்டாலினே அதை எதிர்ப்பது விந்தையாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழகத்தின் 33வது மாவட்டமாக தென்காசி உருவாகியுள்ளதற்காக நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது பல்வேறு நலத்திட்டங்களையும் செயல்படுத்துவது குறித்து பேசிய அவர் உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேசினார்.

அதில் அவர் “உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்காக ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்கிறார். 1996 வரை தமிழகத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்தான் இருந்தது அதை நேரடி தேர்தலாக மாற்றியது திமுகதான்.

பிறகு 2006ல் மீண்டும் அதை மறைமுக தேர்தலாக மாற்றினார்கள். கேட்டால் கவுன்சிலர்கள் ஒரு கட்சியாகவும், மேயர் ஒரு கட்சியாகவும் இருந்தால் ஒன்றுபட்டு பணிபுரிய முடியாது என்றார்கள்.ஸ்டாலின் அவர் இயற்றிய சட்டத்தை அவரே எதிர்ப்பது விந்தையாக உள்ளது. ” என்று கூறியுள்ளார்.