புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

குரு பெயர்ச்சி சிறப்பு லக்ஷார்ச்சனை பூஜைக்கான பிரசாதங்கள்!!

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி விகாரி வருஷம்-தக்ஷிணாயனம் சரத் ரிது - ஐப்பசி மாதம் 11-ம் தேதி பின்னிரவு 12-ம் தேதி முன்னிரவு ஆங்கிலம் (29.10.2019) அன்றைய தினம் உதயாதி நாழிகை 54.14-க்கு (அதிகாலை மணி 3.49-க்கு) கன்னியா லக்னத்தில் குரு பகவான் விருச்சிக   ராசியிலிருந்து தனுசு ராசிக்கு மாறியுள்ளார்.
இதற்காக சிறப்பு குருப்பெயர்ச்சி யாக பூஜை (லக்ஷார்ச்சனை) அக்டோபர் 29-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 7 மணி முதல்  மாலை 8 மணி வரை நடைப்பெற்றது. இதனை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக நடத்தி கொடுத்துள்ளார்.
 
குருப்பெயர்ச்சி பூஜைக்காக தங்களின் ராசிகளுக்கும் பூஜைகள் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்ட வெப்துனியா வாசகர்களுக்கு கொரியரில்  பிரசாதங்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் மூன்று தினங்களுக்குள் நீங்கள் தெரிவித்திருந்த விலாசத்திற்கு வந்தடையும்  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.