வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 13 நவம்பர் 2023 (17:03 IST)

606 கோடி, 460 கோடி, 459 கோடி.. தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர்கள் சொத்து மதிப்பு..!

தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சி  தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் சொத்து பட்டியல் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தற்போது பார்ப்போம்.

சென்னூர் காங்கிரஸ் வேட்பாளர் விவேகானந்த் என்பவருக்கு ரூ. 606.66 கோடிக்கு சொத்து மதிப்பு உள்ளதாக அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கும் அவரது மனைவிக்கும் ரூ.41.5 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி என்பவருக்கு ரூ.460 கோடி சொத்து மதிப்பு உள்ளதாகவும் அவருக்கு ரூ.44 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு வேட்பாளர் ராஜ் கோபால் ரெட்டிக்கு ரூ.459 கோடி சொத்து மதிப்பு இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஆர்எஸ் கட்சியின் வேட்பாளர் பைலா சேகர் ரெட்டி என்பவருக்கு ரூ.227 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

Edited by Siva