திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 12 நவம்பர் 2023 (18:02 IST)

பீர் பாட்டில்களில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த வேட்பாளர்

telungana
மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்த மாதம் 7 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த 5 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் தேர்தல் ஆணையம் அட்டவணை வெளியிட்டது.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

இந்த நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன.

இங்குள்ள  நக்கீரேக்கல் காங்கிரஸ்  வேட்பாளர் வெமுலா வீரேசம் அங்குள்ள மதுபிரியர்களுக்கு பீர் பாட்டில்களில்  ஸ்டிக்கர் ஒட்டி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வரும் நிலையில் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.