வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (16:02 IST)

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி

தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது 
 
தெலுங்கானா மாநிலத்தில்  இந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும்  ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக மிகவும் பிரச்சாரத்தை தொய்வாக செய்து வருகிறது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் அதிரடியாக பல  வாக்குறுதிகளை அளித்த நிலையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. 
 
ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva