வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (17:51 IST)

பாஜகவில் இணையும் தெலுங்கு தேச எம்பிக்கள்: அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு!

நடைபெற்று முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி படுதோல்வி அடைந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு, நான்கு ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்று பின்னர் திடீரென கூட்டணியில் இருந்து வெளியே வந்ததால் அவரது நம்பகத்தன்மை குறித்து மக்கள் சந்தேகம் கொள்ள ஆரம்பித்தனர். இதன் விளைவுதான் அவருக்கு படுதோல்வி கிடைத்தது
 
இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பின்னரும் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர் சோதனைகள் ஏற்பட்டு வருகின்றது. கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விசாரணை செய்ய விரைவில் மத்திய, மாநில அரசுகள் கைகோர்த்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான வெங்கடேஷ், சுஜானா சௌத்ரி ஆகிய இருவரும் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் 3 பேரும் தங்களின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கைய நாயுடுவிடம் வழங்கினர். இந்த 3 எம்.பி.க்களும் பாஜகவில் இணையவுள்ளதாக அறித்துள்ளது சந்திரபாபு நாயுடுவை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனிமேலும் சந்திரபாபு நாயுடுவை நம்பி பிரயோஜனம் இல்லை என்று அக்கட்சியினர் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஜெகன்மோகன் கட்சியை நோக்கி படையெடுக்க தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது