புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (13:57 IST)

ராகுல் காந்திக்கு ஹேப்பி பர்த்டே – மோடி, ஸ்டாலின் வாழ்த்து !

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 49 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். மேலும் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் எங்கும் தலைக் காட்டாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ராகுல்காந்திக்கு தனது 49 ஆவது பிறந்தநாள் தினமாகும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்று காங்கிரஸோ ராகுல் காந்தியோ பிறந்தநாளைக் கொண்டாடாமல் தவிர்த்துள்ளனர். ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டரில் ‘ராகுல் காந்திக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்யத்தையும் பெற வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேப்போல திமுக தலைவர் ஸ்டாலின் ‘என் சிறந்த நண்பருக்கு வாழ்த்துகள். இன்னும் பல ஆண்டுக்காலம் பொதுசேவையில் ஈடுபட வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.