புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (09:02 IST)

செல்வாக்கை இழந்த அதிமுக; ஆட்சி கவிந்தாலும் பரவில்லை... சோலோவாய் கட்டம் கட்டும் பாஜக!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்தாலும் அல்லது கவிழ்க்கப்பட்டாலும் தேர்தலை 2021 ஆம் ஆண்டுதான் நடத்த வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளதாம். 
 
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த நிலையில், 9 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இருப்பினும் ஆட்சியை கவிழ்க்க திமுக சில அதிரடி நகர்வுகளை மேற்கொண்டது. 
 
பின்னர் இந்த ஆட்சி கவிழ்ப்பு அதிரடி நடவடிக்கைகளை நிறுத்திவிட்டது திமுக. இந்நிலையில் சுதாரித்துகொண்ட பாஜக சில தமிழகம் குறித்து சில முக்கிட முடிவுகளை எடுத்துள்ளதாம். அதாவது தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ்ந்தாலும் அல்லது கவிழ்க்கப்பட்டாலும் தேர்தலை 2021 ஆம் ஆண்டுதான் நடத்தப்படுமாம். 
ஆம், அதிமுக ஆட்சி கவிழ்ந்ததும் தேர்தல் என அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் சிம்பிளாக தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு தங்களுக்கு சாதகமான அரசியல் நகர்வுகளில் பாஜக ஈடுபடுமாம். 
 
இப்போது அதிமுக அட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தப்பட்டால் திமுக நிச்சயம் வெற்றி பெற்றுவிடும் என நடந்து முடிந்த தேர்தல் பாஜகவுக்கு புரியவைத்துள்ள நிலையில் இந்த முக்கிய முடிவை பாஜக எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.