இண்டிகோ விமான சேவையில் இடையூறு: திருவனந்தபுரம், நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள்..!
விமான போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகளை சமாளிப்பதற்காக, பயணிகள் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய தென் மாவட்ட நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, இந்த அவசர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ரயில்களின் கால அட்டவணை சுருக்கம்:
நாகர்கோவில் - தாம்பரம் ரயில் (06012/06011): டிசம்பர் 7 இரவு நாகர்கோவிலில் புறப்பட்டு, டிசம்பர் 8 காலை தாம்பரத்தை அடையும்.
திருவனந்தபுரம் - சென்னை எழும்பூர் ரயில் (06108/06107): டிசம்பர் 7 மாலை திருவனந்தபுரத்தில் புறப்பட்டு, டிசம்பர் 8 காலை எழும்பூரைச் சென்றடையும்.
கோயம்புத்தூர் - சென்னை சென்ட்ரல் ரயில் (06024/06023): டிசம்பர் 7 இரவு கோவையிலிருந்து புறப்பட்டு, டிசம்பர் 8 காலை சென்ட்ரலை அடையும். திரும்பும் வழியில் திருவனந்தபுரம் வரை செல்லும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. விமான பயணத்தில் சிக்கியுள்ள பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த அவசர சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran