திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (16:53 IST)

குடியரசுத் தலைவரின் உரையில் கவனிக்கப்பட வேண்டிய பத்து...

இந்திய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரையின் முக்கிய பத்து அம்சங்களை இங்கே தொகுத்துள்ளோம்.
 
1. பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின்படி சுயதொழில் செய்வோருக்கு 19 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 30 கோடி பேருக்கு கடன் வழங்கப்படும்.
 
2. 2024ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே நோக்கம்.
 
3. ஜிஎஸ்டியை அறிமுகம் செய்ததால் ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை சாத்தியமாகியுள்ளது.
 
4. கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை வேகமாக மேற்கொள்ளப்படும்.
 
5. 2022 ஆம் ஆண்டிற்குள் பாரதமாலா திட்டத்தின்படி 35,000 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலை கட்டுமானம் செய்யப்படும்.
6. மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது, பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போக்குடன் அனைத்து நாடுகளும் உடன் நிற்கிறது என்பதை காட்டுகிறது.
 
7. 2022 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ககன்யான் விண்கலத்தில் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புவதற்கான செயல்பாடுகள் துரிதமாக மேற்கொள்ளப்படும்.
 
8. ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது காலத்தின் தேவையாக உள்ளது, நாட்டின் வளர்ச்சியை அது துரிதப்படுத்தும்.
 
9. முத்தலாக் முறை கட்டாயம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
 
10. 2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும்.