1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Tamilnadu labour killed in kerala while construction work

கோவில் கட்டிய தமிழக தொழிலாளி அடித்துக் கொலை! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

Tamilnadu Labour
கேரளாவில் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் கட்டுமான பணிகள் செய்து வந்துள்ளார். கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள நீண்டகரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலின் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த மகாலிங்கம் அங்கேயே தங்கி இந்த வேலையை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மகாலிங்கம் கோவில் அருகே கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கோட்டயம் மாவட்டம் கருகச்சால் பகுதியை சேர்ந்த பிஜூ என்பவர் தூங்கிக் கொண்டிருந்த மகாலிங்கத்தை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து பிஜூவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக கட்டுமான தொழிலாளி கேரளாவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
தமிழக அரசியலில் தலையிடுவதை தமிழிசை நிறுத்திக் கொள்ள வேண்டும்: திமுக எச்சரிக்கை..!