வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 8 மே 2023 (18:27 IST)

ஈரானில் 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிட்டு கொலை -மனித உரிமைகள் குழு

eran
ஈரான் நாட்டில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 42 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

ஈரான் நாட்டில்  பேரதிபர் அயத்தொல்லாஹ் அலி கமெய்னி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

ஈரான் நாட்டில் குற்றச்செயல்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வரும் நிலையில், இதை மனித உரிமை அமைப்புகள் கண்டித்து வருகின்றன.

இதுதொடர்பாக அந்த நாட்டில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 194 பேரை தூக்கிலிட்டுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 42 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர்.  போதைப் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது  செய்யப்பட்ட இவர்களில் பாதிப்பேர் பலுசிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த ஆண்டில் மட்டும் இந்த நாட்டில் 82 கைதிகளை தூக்கிலிட்டுள்ளனர் என்று ஐ.எச்.ஆர் அமைப்பு கூறியுள்ளது. அதேபோல், கடந்த 2021 ஆம் ஆண்டில் 333 கைதிகளை தூக்கிலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.