ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 10 மே 2023 (22:06 IST)

கழிவுநீர் தேங்குவதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை!

மதுரை மாவட்டத்தில் பாத்திரம் கழுவும் நீரால் பக்கத்து வீட்டு வாசலில் தேங்கி நிற்பதால் ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மாடக்குளம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். இவரது வீட்டில் உள்ளவர்கள் வாசலில்  பாத்திரம் கழுவும்போது, வெளியேறிய நீர் அருகில் உள்ள ஓட்டுனரான சோனையின் வீட்டு வாசலில் தேங்கி வந்துள்ளது.

இதுகுறித்து, பலமுறை சோனை மற்றும்  ஜெயக்குமார்  இடையே வார்த்தை மோதல் இருந்து வந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த நாளன்று ஜெயக்குமாருக்கும், சோனைக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சோனை, வீட்டிலிருந்த கத்தியால் ஜெயக்குமாரை சரமாரியாகக் குத்தினார். இதில், ஜெயக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சோனையை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.