’தமிழ் படங்களில்’ நடித்த கவர்ச்சி நடிகைக்கு 6 மாதம் சிறை !
நடிகர் விக்ரம் நடித்த தூள் படத்தில் கொடுவா மீசை அறுவா பார்வை என்ற பாடலுக்கு நடனமாடியவர் மற்றும், நடிகர் அஜித் நடித்த அசல் என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கொய்னா மித்ரா.
இவர் இந்தியிலும் சில ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் மாடல் அழகி பூனம் சேத்தி என்பவரிடம் ரூ. 22 லட்சம் பணம் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இந்தப் பணத்தை அவர் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். இப்பணத்தை திருப்பித் தரும்படி மாடல் அழகி,பலநாட்கள் கொய்தாவிடம் கேட்டும் அதற்கு உரிய பதிலைச் சொல்லாமல் கொய்னா தாழ்தியதாகத் தெரிகிறது.
இந்நிலையில் கொய்த்ரா அண்மையில் ரூ. 3 லட்சத்துக்கு மாடல் அழகியிடம் காசோலை கொடுத்துள்ளார். அதைக்கொண்டு வங்கியில் டெபாசிட் போட்ட போது பணம் இல்லாமல் திரும்பிவந்துள்ளது. இதையடுத்து மாடல் அழகி, கொய்த்ரா மீது மும்பை அந்தேரி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கொய்த்ராவுக்கு 6 மாதம், சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.