ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?
வடமாநிலங்களில் பரவி வரும் ஜிபிஎஸ் நோய் தற்போது ஆந்திராவிலும் பரவி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நோயால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்தி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக சுகாதாரத்துறை இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் ஜிபிஎஸ் நோயால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 267 பேருக்கு ஜிபிஎஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்திய குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே பகுதியில் ஜிபிஎஸ் நோய் அதிகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகின்றது.
இந்த நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் ஜிபிஎஸ் நோய் பரவி விட்டதை அடுத்து, தமிழக சுகாதாரத்துறை இது குறித்த தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva