1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2019 (16:18 IST)

4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவம்: மீட்பு பணியில் தீவிரம்

மும்பை அருகே 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை டோங்கிரி பகுதியில் இன்று மதியம், 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், கட்டிடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். பின்பு இதை பற்றி அக்கம்பத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்பு உடனடியாக மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் சுமார், 40 பேர் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.