வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (06:33 IST)

புரோ கபடி போட்டி: ஜெய்ப்பூர், ஹரியானா அணிகள் வெற்றி

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் புரோ கபடி போட்டி தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன. முதல் போட்டி மும்பை மற்றும் ஜெய்ப்பூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஆரம்பம் முதலே ஜெய்ப்பூர் அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் அந்த அணி 42 புள்ளிகளும், மும்பை 23 புள்ளிகளும் பெற்றதால் 19 புள்ளிகள் வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் அணி வெற்றி பெற்றது
 
இதனையடுத்து இரண்டாவது போட்டி புனே மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இரு அணிகளும் சம அளவில் இருந்ததால் போட்டி கடுமையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹரியானா ஆதிக்கம் செலுத்தியதால் 34 புள்ளிகள் பெற்றது. புனே 24 புள்ளிகள் மட்டுமே எடுத்து 10 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவின்படி ஆறு அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்று 5 புள்ளிகளை பெற்றுள்ளது. புனே, டெல்லி, பெங்கால், உபி ஆகிய அணிகள் இன்னும் புள்ளிப்பட்டியலில் கணக்கையே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது