வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவகுணம் நிறைந்த படிகாரத்தூள் எதற்கெல்லாம் பயன்படுகிறது...?

படிகாரம் சிறிய காயங்கள், உடல் வலி, சரும பாதுகாப்புக்கு, இருமல், மூல வியாதிக்கு, கண் பாதுகாப்பு போன்ற உடல் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அதிகளவு பயன்படுகிறது. மேலும் முடி வளர்ச்சிக்கும், சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளையும் நீக்குகிறது.
சீதபேதி சரியாக, மூக்கில் இரத்தம் வருவதை நிறுத்த வாய்ப்புண் சரிசெய்ய, இருமல், தொண்டை புண் போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த படிகாரம் சிறந்த மருந்தாக விளங்கிறது.
 
உடல் சூட்டினால் சிலருக்கு, மூக்கின் வழியே இரத்தம் வழியும் பாதிப்பு ஏற்படும். படிகாரத்தூளை தண்ணீரில் கலந்து, அந்த நீரை, மூக்கில்  ஓரிரு துளிகள் விட்டு, மூக்கின் மேல் படிகாரத் தண்ணீரில் நனைத்த ஒரு துணியை வைத்துவர, சிறிது நேரத்தில், மூக்கில் இருந்து இரத்தம்  வடிவது நின்று விடும்.
 
காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, சிலருக்கு வாய்ப்புண் ஏற்படக்கூடும், அவர்கள், கடுக்காய்த் தூளை, படிகாரத்தூளில் கலந்து,  அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர, வாய்ப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.
 
மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை சிறிது எடுத்து, நீரில் இட்டு கொதிக்கவைத்து, அதில் சிறிது படிகாரத்தூள் கலந்து, வாய் கொப்புளித்தும்  வரலாம், வாய்ப்புண் உடனே ஆறிவிடும்.
 
படிக்காரத்தூளை சிறிதளவு தேனில் கலந்து நன்றாக குழைத்து, தினமும் இருவேளை என்று தொடர்ந்து சில நாட்கள் வரை சாப்பிட்டு வர  இருமல் பிரச்சனை சரியாகும்.
 
சிறிய வெங்காயத்தில் சிறிது படிகாரத்தூளைக் கலந்து அதை இருவேளை உண்டுவர சூட்டினால் ஏற்பட்ட சீதபேதி பாதிப்புகள் சரியாகிவிடும்.