1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Suspected Indian Army soldier abducted

இந்திய ராணுவ வீரரை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் !

Indian Army
இந்திய ராணுவத்தில் 162 ஆவது பட்டாலியனைச் சேர்ந்த் ஷாகிர் மன்சூர் என்பவர் ஈகைத் திருநாள் கொண்டாட தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றவர் திரும்ப அவரைக் காணவில்லை.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் பகுதியில் இருந்து நேற்றுக் காணாமல் போன இந்திய ராணுவ வீரர் ஷாகிர் மன்சூரை தீவிரவாதிகள் கடத்திருக்கலாம் என ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

மன்சூரின் கார் ஓரிடத்தில் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கபட்டுள்ளதாகவும்,  அவரைத் தேடும் முயற்சிகள் பல புறங்களில் இருந்தாலும்கூட அவர் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
டெல்லியில் இன்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா​