திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (17:40 IST)

பிரபல ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் ...

இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹோட்டல் தாஜ். இந்த  ஹோட்டலுக்கு  பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் மான்செஸ்டர் அழைக்கப்படும் மும்பையில் புகழ்பெற்ற தாஜ் ஹோட்டல் இயங்கி வருகிறது.

ஏற்கனவே கடந்த 2008 ஆம் ஆண்டு, நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தானில் இருந்து கடல் வழியே வந்து இந்தியாவில் நுழைந்த தீவிரவாதிகள்  மும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடித்தினர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த கொலை வெறித்தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இன்று தாஜ் ஹோட்டலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் , தாஜ் ஹோட்டலை சுற்றி பலத்த போலீஸ் பாதுக்காப்பு போட்டப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் இன்று நள்ளிரவு 12;30 மணி அளவில் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.