ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (15:08 IST)

இந்தியாவிற்குள் ஊடுறுவ தயார் நிலையில் தீவிரவாத கும்பல்! – உஷார் நிலையில் இராணுவம்!

இந்தியாவிற்குள் ஊடுறுவுவதற்காக தீவிரவாத கும்பல்கள் எல்லையின் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஆகஸ்டு மாதத்தில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா, சுதந்திர தின விழா போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளதால் எல்லையில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவு அமைப்புகள் அளித்த எச்சரிக்கையின் பேரில் 5 மாநிலங்களில் கடும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 320க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவுவதற்காக 27 பாகிஸ்தான் எல்லையோர பிராந்தியங்களில் பதுங்கியிருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. சுதந்திர தினத்திற்கு முன்னதாக ஊடுறுவல் முயற்சிகள் அதிகரிக்கலாம் என கருதப்படுவதால் எல்லையில் பாதுகாப்பு பணிகள் மற்றும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.