நீட் முதுநிலை கட் ஆப் மதிப்பெண் வழக்கு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்..!
நீட் முதுநிலை 2023 ஆம் ஆண்டின் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என்று குறைத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
சச்சின் ஜெயின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் நீட் முதுநிலை 2023 கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என்று குறைத்ததை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் மனுதாரர் சச்சின் ஜெயின் என்பவர் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இல்லை என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
இதனை அடுத்து மத்திய அரசு நீட் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என குறைத்தது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva