இளையதலைமுறைக்கு அறிவுரை கூறிய யுவன் சங்கர் ராஜா
இன்றைய இளம் தலைமுறையினர் தேர்வு பயம், தேர்வில் தோல்வி பயம், போன்றதற்கெல்லாம் விபரீதம் முடிவு எடுக்கின்றனர்.
சமீபத்தில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த நிலையில், இளையதலைமுறைக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சவாலான காலத்தில் உதவியை நாடுமாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: விஜய் ஆண்டனியின் மகள் மீரா இழப்பை நினைத்த் வருந்துகிறேன். நமது வலிமை, தைரியத்தை சோதிக்கின்ற சவாலான காலங்களில் , இளையதலைமுறையினர் உதவியை நாடும்படி கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.