திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2023 (12:16 IST)

நீட் முதுநிலை தேர்வில் 'கட் ஆஃப்' மதிப்பெண் பூஜ்ஜியம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

சமீபத்தில் நீட் முதுநிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என மத்திய அரசு அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கூட நீட் விவகாரத்தில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டது என்று ஆவேசமாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில் நீட் முதல் நிலை தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என அறிவித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கு இன்றே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதை அடுத்து இன்னும் சில மணி நேரங்கள் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் தர இருக்கும் தீர்ப்பை நாடே எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran