1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (08:37 IST)

சாந்தோம் தேவாலயத்திற்குள் புகுந்த அர்ஜுன் சம்பத்: சென்னையில் பரபரப்பு!

சென்னை சாந்தோம் தேவாலயத்திற்குள் அர்ஜுன் சம்பத் திடீரென சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான சாந்தோம் தேவாலயத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று திடீரென சென்றார். அங்குள்ள ஊழியர்களிடம் சாந்தோம் அருங்காட்சியகத்தை திறந்து காட்ட வேண்டும் என்றும் அங்குள்ள பொருட்களை பார்வையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர்கள் உரிய அனுமதியின்றி திறக்க மறுத்துவிடவே தேவாலயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்ட அவர் தான் திரும்ப வருவதாக கூறி சென்றுள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று இரவு வரை தேவாலயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.