புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (19:37 IST)

திருநங்கைகள் நடத்தும் ஆவீன் பாலகம்..

ஊட்டியில் திருநங்கைகள் நடத்தும் ஆவீன் பாலகம் திறக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில், ரேசிங் கிராஸ் பகுதியின் பூமால் வளாகத்தில் முழுக்க முழுக்க திருநங்கைகளே நடத்தும் ஆவீன் பாலகம் திறக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா மற்றும் ஆவீன் இயக்குநர் வள்ளலார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

அப்போது பேசிய வள்ளலார், “இந்த பாலகத்தை நீலகிரி சுய உதவிக்குழுவில் உள்ள 5 திருநங்கைகள் நடத்துகின்றனர். இது சிறப்பாக செயல்பட்டால் தமிழகம் முழுவதும் இது போன்ற பாலகங்கள் விரிவுப்படுத்தப்படும், சமூகத்தில் பின் தங்கிய மக்களாகிய திருநங்கைகள் வாழ்வாதாரம் பெரும் நோக்கில், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

மேலும் ”திருநங்கைகள் மாடுகளை வளர்க்க வாய்ப்பிருந்தால், பால் உற்பத்தியை பெருக்க மாடுகள் வாங்க கடனுதவி செய்து கொடுக்கப்படும்” எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.