திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (17:16 IST)

காணாமல் போன விமானி அபிநந்தன் – தமிழகத்தை சேர்ந்தவரா ?

பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையைச் சேர்ந்த காணாமல் போன விமானி தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த எதிர்தாக்குதலின் போது இந்தியாவைச் சேர்ந்த விமானி அபிநந்தன் என்பவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக இந்திய விமானி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் இந்திய அரசோ அல்லது பாகிஸ்தானிய அரசோ அதை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இப்போது காணாமல் போன விமானி தமிழகததை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்  சென்னை தாம்பரத்தைச் அபிநந்தன். என்றும் கூறப்படுகிறது. அவரது தந்தை, வர்த்தமானும் ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது சம்மந்தமாக தமிழக அரசு சார்பிலோ அல்லது விமானியின் குடும்பத்தின் சார்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.