திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 27 பிப்ரவரி 2019 (15:21 IST)

தொடர் தாகுதல்கள் தேர்தலை பாதிக்குமா ?- தேர்தல் ஆணையர் விளக்கம் !

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அடுத்தடுத்து எல்லைத்தாண்டி தாக்குதல் நடத்தி வருவதால் தேர்தல் தள்ளிப்போகுமா என்ற சந்தேகத்திற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இரு நாட்டு எல்லைகளிலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. எல்லைகளில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. அபாயகரமானப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடர்தாக்குதல்களால் இந்தியாவில் இன்னும் இரண்டு மாதத்தில் நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் சரியான நேரத்தில் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது சம்மந்தமாகப் பதில் அளித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ’புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய சூழலையும், இந்திய விமானப்படையின் பதிலடிக்கு பிந்தைய சூழலையும் தேர்தல் ஆணையம் கூர்ந்து கவனித்து வருகிறது. ஆனால், இப்போதைக்கு அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு நாங்கள் எங்களது வேலையை செய்ய கடமைப்பட்டிருக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.

இதனால் தேர்தல் நடப்பதில் இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.