வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 பிப்ரவரி 2019 (13:18 IST)

இரு நாடுகளிலும் விமான சேவை ரத்து ? – தாக்குதல் எதிரொலி !

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் அடுத்தடுத்து எல்லைத் தாண்டித் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளிலும் விமான சேவை ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது.

நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாலகோட் எனும் பகுதியில் நடத்தியத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.

அடுத்தடுத்த இரண்டு நாட்களில் இருநாடுகளும் அடுத்த நாட்டு எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திவருவதால் இரு நாடுகளிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. அதிலும் முக்கியமாக எல்லைப் பகுதிகளில் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. இதையடுத்துஇரு நாடுகளும் அடுத்த நாட்டின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா தனது எல்லையோரப்பகுதிகளில் உள்ள விமான நிலையங்களை மூட முடிவு செய்துள்ளது. இந்தியாவில் வெளிநாடுகளுக்கு செல்லும் சில விமானங்கள் மாற்றுப்பாதையில் செல்ல இருக்கின்றன. அதுபோல இந்தியா பாகிஸ்தான் இடையிலான விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேப் போல பாகிஸ்தானில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் காலை முதல் மூடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் பாகிஸ்தானில் இருந்து எந்த விமானங்களும் இயக்கப்படவில்லை.