1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Sivasankar baba escapes from hospital

டேராடூன் மருத்துவமனையிலிருந்து சிவசங்கர் பாபா தப்பியோட்டமா?

சிவசங்கர் பாபா
டேராடூன் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையை அடுத்துள்ள கேளம்பாக்கம் பகுதியில் சுஷில் ஹரி என்ற சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீசும் வெளியிடப்பட்டது
 
இந்த நிலையில் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக சிவசங்கர் பாபா சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டதை அடுத்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை செய்யவும், தேவைப்பட்டால் அவரை கைது செய்யவும் டேராடூன் விரைந்தனர். இந்த நிலையில் திடீரென மருத்துவமனையில் இருந்து சிவசங்கர் பாபா தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது இதனையடுத்து அவரை தேடும் பணியில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
அடுத்த கட்டுரையில்
இனி விசில் கிடையாது, விழிப்புணர்வு பாடல்தான்; சென்னை மாநகராட்சி முடிவு!